MARRIAGE MATCH

  •    > Details
  • THIRUONAM THIRUMANA PORUTHAM


    திருமண பொருத்தம்

    1- தினப் பொருத்தம்

     மணமகன்  மற்றும்  மணமகளின்  அன்றாட வாழ்க்கை  எப்படி இருக்கும் என்பதற்கும்  அவர்களுக்குள்  தினமும்  சண்டைகள் வராமல்  அன்பு பகிர்ந்து  மகிழ்ச்சியுடன்  இருப்பார்களா  என்பதை  தெரிந்து கொள்வதற்கு  இந்தப் பொருத்தம் அவசியமாகும்.


    2- கன பொருத்தம்

     திருமண வாழ்க்கை  மகிழ்ச்சியாக  இருக்குமா என்பதையும்  மற்றும்  அடிப்படை  குணங்களில்  ஒருவருக்கொருவர்  அனுசரித்து  நடந்து கொள்வதைப் பற்றியும்  அறிந்து கொள்ளலாம்கணம்  மூன்று வகைப்படும்தெய்வ கணம்மனித கணம்மற்றும் ராட்சஷ கணம்.

     மொத்தம் 27 நட்சத்திரங்களும்  இந்த மூன்று கணத்தில்  ஒரு கணத்திற்கு  ஒன்பது நட்சத்திரங்கள் வீதம் அடங்கிவிடும்.


    3- ஸ்திரி தீர்க்க பொருத்தம்

     திருமணம் ஆகும் பெண்கள்  வாழ்நாள்  முழுவதும்  தீர்க்க சுமங்கலியாக  இருக்கவே  பெரும்பாலோனோர்  விரும்புவார்கள்ஆகையால் தான்  தீர்க்க சுமங்கலியாய் இருக்க இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறதுமேலும் பொருள் செல்வம்  செல்வாக்கினை  தருவது ஆகும்திருமண வாழ்க்கை  நீண்ட காலம் நீடிக்க  ஸ்திரி தீர்க்க பொருத்தம் உதவுகிறதுமேலும்  பெண்ணின் ஆயுள்   மற்றும் ஆரோக்கியத்தினை  ஆணின் நட்சத்திரம் வைத்து  எப்படி மாறுபடுகிறது என்பதை பொறுத்து பார்க்கப்படுகிறது.


    4- மகேந்திர பொருத்தம்

     திருமண வாழ்க்கையின்  முக்கிய கட்டமான  குழந்தை  பேரு  குறித்து  கணிக்கப்படுவது  மகேந்திர பொருத்தமாகும்புத்திர பாக்கியம்  சிறப்பாக அமைய  மகேந்திர  பொருத்தம்  அவசியமானதாக பார்க்கப்படுகிறதுகுழந்தை  பாக்கியம்  ஆயுள் விருத்தி  சௌபாக்கியம்  போன்றவற்றைத் தருவதாகும்.


    5- யோனி பொருத்தம்

     யோனி பொருத்தம்  சரியாக இருந்தால்  தம்பதிகள்  இருவரும்  தாம்பத்திய உறவில்  நீடித்த தன்மையும்  மனநிறைவும் நிறைந்து  சுகமும் இருக்கும்நமது ஜோதிட சாஸ்திரங்களில்  27 நட்சத்திரங்களுக்கும்  ஒவ்வொரு மிருகம் உண்டுஅதன் அடிப்படையில்  இந்த பொருத்தமானது பார்க்கப்படுகிறதுஆண் பெண்  நட்சத்திரங்களுக்கு இடையே  பகை மிருகங்கள் இல்லாமல் இருந்தால்  அது நல்ல பொருத்தம் ஆகும்.


    6- ராசி பொருத்தம்

     ஆண் பெண்  குடும்பத்திற்குள்  நல்ல உறவு நீடிப்பதற்கும் . தம்பதிகள் இருவரும் புரிந்து வாழ்வதற்கும்ராசிப்  பொருத்தம் பார்க்கப்படுகிறது.

     பெண் பிறந்த ராசியை வைத்தும்ஆண் பிறந்த ராசியை வைத்தும்  இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.


    7. ராசி

    Page
    of
    Loading page ...