கன்னிராசி அன்பர்களே! சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண் பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.