RASI URUVAM

  •    > Details
  • மீன ராசியின் உருவம்


    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
                 
                 மீன ராசியின் உருவம்
    மீன ராசியின் உருவம் இரட்டை மீன்கள் ஆகும்.  மீன்கள் எப்பொழுதும் தன்னையும் தன்னை  சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து கொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருப்பவை. இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும் இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டு குடும்பமாக வசிப்பதை  பெரிதும் விரும்புவார்கள் என கூறப்படுகிறது.
    !!! வாழ்க வளமுடன்!!!