ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
மகர ராசியின் உருவம்
மகர ராசியின் உருவம் முதலாகும். முதலை தன் இறைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக் கிடக்கும் குணம் உடையவை. இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்து இடத்திலிருந்து கொண்டே தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைபோல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னைச் சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள். ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வார்கள். பொறுமை இவர்களுக்கு அதிகம்.
!!! வாழ்க வளமுடன்!!!