ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
விருச்சக ராசியின் உருவம்
விருச்சக ராசியின் உருவம் தேள் ஆகும். தேய்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும். மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்களைப் புரிந்து கொள்வது சிரமமாகவே இருக்கும். இரண்டு தேள்கல் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சக ராசிக்காரர்கள் இடம் போட்டி பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேள் ஆனது குஞ்சி பொறத்தால் தாய் தேள் இறந்துவிடும். இதனால் விருச்சக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
!!! வாழ்க வளமுடன்!!!