RASI URUVAM

  •    > Details
  • கன்னி ராசியின் உருவம்


    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
             
              கன்னி ராசியின் உருவம்
    கன்னி ராசியின் உருவம் கன்னி பெண்ணாகும்.  கன்னிப் பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக இளமையாக கவர்ச்சியாக காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக கவர்ச்சியாக இளமையாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.  கன்னிப் பெண்கள் எப்பொழுதும் ஆடி பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
    !!! வாழ்க வளமுடன்!!!