RASI URUVAM

  •    > Details
  • மேஷராசியின்உருவம்

    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
                            மேஷம்
    மேஷ ராசியின் உருவம் ஆடு ஆகும்.  எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேஷ ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்.  ஆட்டு மந்தையை கவனியுங்கள்,  அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேஷ ராசிக்காரர்களை கழகக்காரர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது,  அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும். இதனால்தான் மேஷ ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டடத்தின் மீதோ எளிதில் ஏறி விடும், ஆனால் இறங்கத் தெரியாது, இதனால் மேஷ ராசிக்காரர்களை விவேகம் இல்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனப்பெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப் போல் எந்த பருவ காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும்.  இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடலுறவு காட்சிகளை காணலாம். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக் கூறப்படுகிறது.
    !!! வாழ்க வளமுடன்!!!