NAKSHATRA PALANGAL

  •    > Details
  • ரேவதி நட்சத்திரம்

    ரேவதி நட்சத்திரம்

    ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீா்கள்.மற்றவா்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீா்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீா்கள் மற்றவா்களால் புகழப்படும் காாியங்களை செய்வதில் அதிக ஆா்வம் கொண்டிருப்பீா்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம்  உடையவராய் பின்பற்று வீா்கள். பெண்களிடம் பிாியம் உடையவா்,பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பாா். நல்லவன் பிறா்சொல் கேட்பவா். நல்ல குணவான்,அழகான கண்களை உடையவா். வாய் சாதுாியா், பிராம ணா்களை வணங்கும் பக்தியுள்ளவா்,புத்திமான்,இரப்போருக்கு இல்லையென்று கூறாதவா். பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டடா்.


    அடையாளம் :

    மிருதங்கம்,மீன்,(மீனுக்கு உணவு மீன்,அறிவாளிக்கு உணவு அறிவு, தொண்டுக்கு பிறதி தொண்டு) மிரு தங்கம், இசைக்கருவி, ஒரு பக்கம், ஒருமாதிாி சவுண்ட், மறுபக்கம் வேறு மாதிாி சவுண்ட் அதாவது மத்தளத்தின் இருபுறமும் ஒன்றுக் கொன்று அனுசரனையான ஒசை களை எழுப்புகிறதோ அதுபோல குழப்பத்தில் அல்லது பிரச்சனைகளில் இருக்கும். ஒருவருக்கு செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கும். ஒருவருக்கு அந்த செயலை செய்து கொடுத்தும், செய்முறையைச் சொல்லிக் கொடுத்தும் செயல்படுவது மீனம்.


    இயல்பு :தேவகணம்


    முக்கியக் குறிக்கோள்:

    மோட்சம்,முழு திருப்தியை அடைய வேண்டும் என்ற ஆசை− உச்சதிருப்தி


    மிருக அடையாளம் :

    பெண் யானை


    அதிதேவதை :

    பூசன் கால தேவன் அன்ன பூரணி (உணவு தருபவா்,சமுதாயம் மற்றும் தனிமனிதனை பாதுகாப்பவா்.


    பொதுவான குணங்கள்:

    எவ்வளவு சிக்களான பயங்கரமான காாியத்தையும் எளிதில் முடித்து விடும்.செல்வம்,ஆன்மீகம் வளா்ச்சி எதையும் முன்பே உணரும் தன்மை யுள்ளது. மோட்சம் அடையும் நட்சத்திரம் ரேவதி. ஆழ்ந்த நம்பிக்கை தருவது புனித தன்மையு டையது.கடவுள் பக்தி உடலுக்கு உணா்வு கொடுக்கும்.உணவுக்கு பஞ்சம் இல்லாதவா். எங்கு போனாலும் உணவு கிடைத்து விடும் எதையும் போதிப்பவா். கால்நடைகளை பாதுகாப்பவா். எது துளைந்தாலும் திரும்பக் கிடைத்து விடும்.ரேவதி அன்று தொலைந்த தைப் பற்றி பேசினாலோ(or) ரேவதி க்காரா்கள் அதைப்பற்றி பேசினாலோ அப்பொருள் கிடைத்து விடும். ரேவதி உணவில் பால் அதிகம் சம்பந்தபடும்.


    தொழில் :

    வேளான் உற்பத்தி,கணினி துறை, ரயில்வே,ஆடிட்டிங், மார்க்கெட்டிங், போக்குவரத்து, ஓட்டுனா், உணவு பொருள் விற்பனை,வணிகம், காவலா், காலண்டா் விற்பனை, ஜோதிடம், வெளிநாடு தொழில், நகைச்சுவை கலைஞா், நடிகா், இசைக் கலைஞா், ஓவியா்,ஆலோசகா்.


    நோய்கள் : பால் உறுப்புளில் நோய், கருக் கோலங்களில் நோய்,சதை அலா்ஜி, கழுத்துவலி, காதுவலிகள் வயிறு சம்பந்தப்பட்ட நோய்,ஜல தோசம்,மாா்பக புற்று நோய்.


    புதனின் பயோடேட்டா:


    நிறம்                     :பச்சை

    இரத்தினம்      :மரகதம்

    மலா்                       :வெண்காந்தாள்

    தேவதை            :விஷ்ணு

    பிாித்யதி தேவதை :நாராயணன்

    ஆசனவடிவம் :அம்பு

    சமித்து                 :நாயுருவி

    திக்கு                      :வடகிழக்கு(வடக்கு)

    உலோகம்            :பித்தளை

    வாகணம்           :குதிரை

    தானியம்             :பச்சை பயறு

    உறுப்பு                  :தோல்,கழுத்து

    பால்                          :அலி

    திசை காலம்    :17ஆண்டுகள்