மகர ராசி அன்பர்களே!
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக
இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில்
நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும்
ஏற்படும். பெண்கள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர் களால் அடிக்கடி
பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கண வன் -
மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தாய்வழி உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும் என்றாலும் பாதிப்பு இருக்காது.
மாதப் பிற்பகுதியில் சகோதரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக் கூடும். அக்கம்பக்கத்தில்
இருப்பவர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக
நடந்துகொள்ளவும்..
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற
சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே
செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன்
லாபமும் படிப்படி யாக உயரும். ஆனால், முன்பின்
தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டாம். பணியாளர்கள் நல்லபடி
ஒத்துழைப்பார்கள்.
சாதகமான நாள்கள்: ஜன: 14,16,21,25,30 பிப்: 1,4,7,10
சந்திராஷ்டமம்: ஜன 17 அதிகாலை முதல் 18,19 மதியம் வரை
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து
வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.