NAKSHATRA PALANGAL

  •    > Details
  • அஸ்தம் நட்சத்திரம்

    அஷ்தம் நட்சத்திரம் பலன்

     ஆக்கபூர்வமானவர்,  இயந்திர     கதியில்  வேலை  செய்பவர்.  இயல்பானவர்,  புன்னகையோடு கூடியவர்  வயோதிக காலத்தில் செல்வம் உள்ளவர்.  எளிதாக  நண்பர்களை வசப்படுத்துபவர்.  என்றாலும்  ஒட்டாமல் வாழ்பவர். சுற்றுப்புற  சூழ்நிலையால்  அதிகம் பாதிக்கப்படுபவர்.  நிறைய ஏற்ற, இரக்கங்கள்  வாழ்க்கையில்  ஏற்படும்.  மனோ நிலைக்கு ஏற்றவாறு  செயல்படுபவர். Moody type.

     பொதுவான குணங்கள

     பிறரைப் போல்  நடிப்பது  பேசுவது  இதனுடைய பிரத்யோக குணம்.  சிந்தனை செயல் இரண்டிலும் சிறந்தவர்.  சுய கட்டுப்பாடு உடையவர்.  எப்போதும்  மெல்லிய புன்னகை இருக்கும்.  கைவினைப் பொருட்கள் செய்வதில் நிபுணர்.  குறையில்லாமலும்,  முறையாகவும்,  உடனடியாகவும்,  எல்லாவற்றையும் செய்பவர்.  கடின உழைப்பு,  இந்த நட்சத்திரத்தில்  கிரகம்  இருந்து  உரிய காலத்தில்  தசா புத்தி நடக்கும் போது  குழந்தைகள் உண்டாகும்.  நோயைக் குறை க்கும்  சக்தி உண்டு.  சட்ட திட்டங்களையும்  எதிர்ப்புகளையும்  சமாளிக்கும் குணம்,   சுய  முன்னேற்றம்  அடையும்.  தான் தேடி அடைய  நினைத்ததை  எப்படியும் அடையும்.

     அடையாளம் :

    அபாய ஹஸ்தம்−உதவிக்கரம். எல்லா செயல்பாடுகளும் உதவி செய்வதாக இருக்கும் உதவி செய்வதனால் ஏற்படும் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்கும்.

    முக்கிய குறிக்கோள் :

    மோட்சம்,ஆசை உச்ச நிலை

    மிருக அடையாளம் :

    பெண் எருமை

    அதிதேவதை  : சாவித்திாி சாவித்தா்(சூாியன்)

    தொழில் ஈடுபாடு:

    பெயின்டா்,ஓவியா்,அறிவாளி, ஆசிாியா்,எழுத்தாளா், பத்திாிக்கையாளா், விற்பனையாளா். பொது ஜன தொடா்பாளா், மருத்துவமனை தொண்டு நிருவனா்களில் தொழில் புாிபவா். சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறையில் பணிபுாிபவா். விழாக்களைத் திட்டமிடுபவா் ஜோதிடா், கைரேகை நிபுணா்.

    நோய்கள் : 

    அதிகம் பாதிக்கப்படுகின்ற நரம்பு மண்டலம் கோளாறு உடையவா். உடம்பின் உட்பகுதியில் கோளாறு உடையவா். சிறுகுடல் மலக்குடல் பிரச்சனை உள்ளவா். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு உள்ளவா். Gold,Cough,Alergy,Skin Problem கைகளில் கோளாறு.

    சந்திரனின் பயோடேட்டா:

    நிறம்             :வெண்மை

    மலா்               : வெள்ளை அலாி

    தேவதை       : பாா்வதி தேவி

    தேவதை       : பாா்வதி தேவி

    இரத்தினம் : முத்து

    சமித்து         : முருங்கை

    திக்கு             : தென்கிழக்கு

    சுவை             :இனிப்பு

    திசைகோலம் : 10ஆண்டுகள்