Weekly Rasi Palangal

  •    > Details
  • MEENA RASI VARA PALAN

    மீனராசி அன்பர்களே!

    குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.

    வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

    வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடி ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

    குடும்பத்தை  நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.

    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, மே 1

    அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6

    வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

    பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.

    ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ 

    வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன் 

    தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் 

    மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே