தனுசுராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் இனம் தெரியாத ஒரு விரக்தி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 29, மே 1
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6
சந்திராஷ்டமம்: 3 முற்பகல் முதல் 4 முழுவதும்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து