கன்னிராசி அன்பர்களே!
வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 30, மே 2
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7
சந்திராஷ்டமம்: 28 முதல் 29 விடியற்காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுலோகத்தை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே