Weekly Rasi Palangal

  •    > Details
  • SIMMA RASI VARA PALAN

    சிம்ம ராசி அன்பர்களே!


    தேவையான அளவுக்குப் பணவரவு  இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் சிறிய அளவில் உடல்நல பாதிப்பும் அதன் காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படும். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

    அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அநாவசிய சிக்கல்களைத் தவிர்க்கும்

    வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

    குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.

    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 29, மே 3

    அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7

    வழிபடவேண்டிய தெய்வம்: நடராஜப் பெருமான்

    பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்

    பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்

    இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே