மிதுன ராசி அன்பர்களே!
சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, மே 2
அதிர்ஷ்ட தரும் எண்கள்: 6, 9
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே