P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
உத்திரம் நட்சத்திர பலன்கள்
உத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோராலும் விரும்பப்படுவார், வெற்றியாளர் உறுதி உள்ளவர். மதிக்கப்படுவார், வசதியும், ஆடம்பரமும் உடையவர். சிறந்த புத்தி கூர்மையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் திறமையும் உள்ளவர். சந்தோஷமானவர், நட்புடன் பழகுபவர். தந்திரமானவர், தனித்தன்மை உள்ளவர். இதய சுத்தம் உள்ளவர்.
பொதுவான குணங்கள் :
சிம்ம உத்திரம்-தயாள குணம் உள்ள கொடையாளி, ஆக்கபூர்வமான சக்தி உள்ளவர். கன்னி உத்திரம்- அற்புதத்தை தேடி அடையும் யோகம் உள்ளவர். உண்மை அறிதலில் வல்லவர்( யார் மந்திரி. எப்படி அவரைப் பார்த்து தனக்கு ஒரு இடம் பிடிக்கலாம் என்று யோசிப்பவர். அற்புதத்தை அடைப்பவர்)
1 ஒன்றாம் பாதம்- நல்வழி செயல்பாடு, புகழ் இல்லாத வேலைகளை உத்திரம் ஒன்றாம் பாதம் செய்யாது.2,3,4 பாதங்கள்- அதிகாரம், பணி, தனித் திறன்,( அடுத்தவர்களுக்கு வேலை செய்யும் போது தனித்திறமை வெளிப்படும்) சில சமயம் Dedicated life ஆகவும் இருக்கும்.Reyal service பணி செய்வதற்கே உரியது உத்திரம். முதன்மை ஸ்தானத்தை அடைய முயற்சிக்காத சமூக சட்டதிட்டங்களுக்கு உடன்படுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை செம்மைச் செய்பவர் . விசேஷம், திருமணம் போன்றவற்றின் மூலம் எல்லோரையும் ஒன்று சோ்த்து குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்துபவா். பாவலா்,சந்தோஷ முள்ளவா்,தாராளமானவா். அதற்காகவே எல்லோராலும் விரும்பப்படுவா். ஏதாவது ஒரு துறையில் நிபுணா். அனுபவ கல்வி, நிபுணத்துவம்- அதன்மூலம் தொழில், எந்தத் துறையில் இருந்தாலும், அதில் அதிகாரி, தைரியம் உடையவர். நல்லவர்களுக்கு ஆதாரமாக போரிடுபவா்.மிகவும் தனிமையில் இருப்பதாக நினைப்பவா். சரியான நட்பும்,உறவும் வலிய வந்து சேராத போது மட்டும் பிறாிடம் ஒட்டுபவா். எதையும் விட்டுத்தருபவா்.
மிருக அடையாளம் : எருது−காளை
அதிதேவதை :அாியமான் son of அதிதி.விருந்து கொடுத்தல் விருந்து உண்ணல். எல்லோரையும் உபசாிப்பவா்.போஷிப்பவா்.
அடையாளம் : மெத்தை
முக்கியகுறிக்கோள் : மோட்சம்− ஆசையின் உச்ச நிலை அடைதல்
தொழில் ஈடுபாடு:
சமூக ஊழியர், எழுத்தாளர், நடிகர், பத்திரிக்கையாளர்(media) அரசு ஊழியர்,Physio Therophy Counselling, வல்லவர். சுகாதாரத்துறை ஊழியர், ஜோதிடர், கணக்கியல் அறிஞர், வியாபார நோக்கம் உடையவர், விற்பனை பிரதிநிதி.
நோய் கள் :
உதடு, வாய், சம்பந்தப்பட்ட நோய்கள், பால்வினை நோய்கள், கை,முழங்கை நோய்கள், தோல் வியாதிகள்,சொிமானக் கோளாறுகள்.
சூரியன் பயோடேட்டா:
நிறம் :சிவப்பு
இரத்தினம் :மாணிக்கம்
மலா் :செந்தாமரை
சமித்து : இருக்கு
திக்கு : கிழக்கு
சுவை :காரம்(கார்ப்பு)
உலோகம் :தாமிரம்
வாகனம் : ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் (தேர்,)மயில்
தானியம் :கோதுமை
பிணி :பித்தம்
திசை கோலம் :6வருடம்
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

