மேஷராசி அன்பர்களே!
பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகி விடும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகம் அடையச் செய்யும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28,30
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!