NUMBERS STRENGTH

  •    > Details
  • 7,16,25-தேதியில் பிறந்தவர்கள்

    பிறந்த தேதிகள் 7,16,25,பலன்கள்

    7-ம் தேதி பிறந்தவர்கள்:

     சாந்தமான சுபாவங்களும் அமைதியான மனப்பான்மையும் உடையவர்கள். சுலபமாக பிறருக்கு விட்டுக் கொடுத்து அடங்கி இருப்பார்கள். புத்தி சாதுர்யமும் ரகசியத்தனமும், விசேடமாக இருக்கும். தெய்வ வழிபாட்டிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஈடுபடுவர். சதா குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். குழந்தை போன்ற சுபாவங்கள் இருக்கும். காதலிலும் களை ஆர்வத்திலும் பிடிவாதம் இருக்கும்.


    16-ம் தேதி பிறந்தவர்கள்:

     16ஆம் தேதி பிறப்பவர்கள் மற்ற இருவரையும் (7,25) விட விசேடமான மனோ சக்திகள் உடையவர். இவர்களை சரியாக ஆராய்ந்தால் இவர்களுடைய அபூர்வ சாமர்த்தியங்களை பிரகாசிக்கச் செய்யலாம். இத் தேதியில் குழந்தைப் பருவத்திலேயே ரசித்தமடைந்த அறிஞர்களும், கவிஞர்களும்,நடிகர்களும்,பிறந்திருக்கின்றனர். இவர்களில் அனேகர் சமூகம் திடுக்கிடக்கூடிய காரியங்களை செய்கின்றனர். சமூகம் தண்டிக்கக்கூடிய தவறான காரியங்களிலேயே சகஜமாக ஈடுபடுகின்றனர். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாது இருத்தல் இவர்களது வாழ்க்கை மேன்மை அடையும்.


    25-ம் தேதி பிறந்தவர்கள்:

     தீவிரமான மத பிடிவாதம் உடையவர்கள். தான் அனுசரிக்கின்ற மத வழிபாடுகள் சரியானது என்று பகிரங்கமாக கூறுவர். இவர்களை அநேகர் பின்பற்றுவர். இத்தேதியில் பிறப்பவர்கள் வணங்கத்தக்க மனிதர்களாகியின்றனர். அதிகாரமும், வணங்கப்படுதலும் இந்த எண்ணுடன் கூடப்பிறந்தவை. இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.


     அதிர்ஷ்ட காலம் :

     முக்கியமான காரியங்களை 2,11,20, 29 தேதிகளும்,தேதி,மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் தினங்களும் நன்மை தரும்.


     சாதகமான நாட்கள்:1,10,19, தேதிகள் .25ந் தேதி எப்பொழுதும் நன்மை தரும். 19 ந் தேதிகளில் தீமையும் நிகழும்.8,17,26,ந் தேதிகளும் துரதிர்ஷ்டமானவை. முழுவதும் கூட்டினால் 7, அல்லது 8 வரும் தினங்களும் தீய பலன் அளிப்பவையே.


     நிறம் :

     வெள்ளையே இவர்கள் மனதை வெகுவாகக் கவருமெனினும் இலேசான மஞ்சள், வெளிர் பச்சை, வெளிர்நீலம் ஆகிய நிறங்களை தரிப்பதே நன்மை தரும். எல்லா ஆழ்ந்த நிறங்களும் இவர்களுக்கு தீமையானவை. முக்கியமாகச் சிவப்பும், கருப்பும் துரதிருஷ்டமானவை.


    இ ரத்தினம் : வைடூரியம் மிக அதிர்ஷ்டமானது.