P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
எண்-6-வெள்ளி(சுக்கிரன்)
பிறந்த தேதி-6,15,24ல் பிறந்தவர்கள்
6-ம் தேதி பிறந்தவர்கள்:
மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்களாக இருப்பர். அடக்கமான சுபாவமும் ஆழ்ந்த கருத்துக்களும் இருக்கும். கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் இருக்கும். பெண் தன்மை ஓரளவு தோன்றும்.
15-ம் தேதி பிறந்தவர்கள்:
பதினைந்தாம் தேதியில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். எல்லோரையும் வெகு எளிதில் வசப்படுத்தக் கூடியவர்கள். ஆதாயம் வந்து கொண்டே இருக்கும். பிரமிக்க தக்க பேச்சு வன்மையும் கலைகளில் தேர்ச்சியும் உண்டு. சாதாரணமாக பேசுவதே தேர்ந்த நடிகரோ, பிரசங்கியோ பேசுவது போல இருக்கும். இயற்கையாகவே வாதமிடுவதும், நகைச்சுவை யுடன் பேசுவதிலும் சமர்த்தராக இருப்பர். எவரையும் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய கூர்மையான வசீகரம் மிகுந்த விழிகள் உடையவராக இருப்பர். சதா சந்தோஷமாக இருக்கும் மனம் உடையவர்கள்.
24-ம் தேதி பிறந்தவர்கள்:
அடக்கமான தன்மைகள் நிரம்பிய இவர்களே காரியத்தை சாதித்துக் கொள்வதில் சிறந்தவர்கள். சமயோசிதமாகப் பேசுவார்கள். அதிர்ஷ்டகரமான விவாகமும் பெரிய பதவியும் வாழ்க்கையில் தேடி வரும். இவர்களுக்கு துணிச்சலும் தீவிரமும் உண்டு. சலியாத உழைப்பினால் அதிர்ஷ்டத்தை முழுவதும் பிரயோசனப்படுத்திக் கொள்ளுவா ர்கள். மேல் அதிகாரிகளால் பெரிதும் விரும்பப்படுவர்.
அதிர்ஷ்ட காலம் :
முக்கியமான காரியங்களை 6,15,24 தேதிகளிலும்,தேதி,மாதம்,வருடம், மூன்றையும் கூட்டினால் 6 ஆறு வரும் தினங்களிலுமே செய்துவர அதிர்ஷ்டம் விருத்தியாகும்.9,18,27 தேதிகள் சாதகமான நாட்களாகும்.
துரதிர்ஷ்ட தினங்கள் :
3,12,21,30 தேதிகளும் முழுவதும் கூட்டினால் 3 வரும் தினங்களும் துரதிர்ஷ்டகரமானவை. இர் தினங்களில் கூடுமானவரை ஒரு முயற்சியிலும் ஈடுபடாது இருத்தல் நல்லது. அவசரப்பட்டு 5,14,23 தேதிகளில் ஒரு காரியத்தை முடிவு செய்யக்கூடாது.
நிறம் : ஆழ்ந்த பச்சை,ஆழ்ந்த நீலம்,
மற்ற நீலம், பச்சை சிவப்பு கலந்த வர்ணங்கள்,அதிர்ஷ்டமானவை. வெள்ளை,மஞ்சள்,ரோஸ், ஒத்துக் கொள்ளாத நிறங்களாகும்.
இரத்தினம்:
மிக மிக அதிர்ஷ்டமானது மரகதம் ( பச்சை).இருதய வலிமையும், சந்தோஷமும் அதிர்ஷ்டமும் பச்சை அணிவதால் ஏற்படும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

