P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
பிறந்த தேதி-4,13,22,31
பிறந்தவர்களின் குணங்கள்:
4-ந் தேதியில் பிறந்தவர்கள்:
இந்த தேதியில் பிறப்பவர்கள் மிகுதியான கண்டிப்பு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும், பலமும் இருக்கும் போர் வீரர் போன்று வாழ்வார். உணவிலும் போகங்களிலும் மிதமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் பொழுதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து சோர்வடையாமல் இருக்க வேண்டும். இனிமையாகவும் கவர்ச்சியாகவும் பேச கற்றுக் கொள்ளுதல் அவசியம்.
13-ந் தேதி பிறந்தவர்கள்:
இந்தத் தேதியில் பிறப்பவர்களுக்கு திடுக்கிடக் கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும். அபாயங்கள் வந்து நீங்கும். சிறுவயதிலேயே குடும்பத்தில் இவர்களை பாதிக்கக்கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமை உடைய இவர்கள் நேர்மையாகவும் மறைவில்லாமலும்
நடந்து கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக்க உன்னத நிலையை அடைவார். பெண்களால் இவர்களுக்கு அநேக சிரமங்கள் நேரிடக்கூடும்.
22-ந் தேதி பிறந்தவர்கள்:
இந்த தேதியில் பிறந்தவர்கள் நன்மையை விட தீமையே இவர்கள் மனதை மிகுதியாக கவரும். விதி இவர்கள் வாழ்க்கையை தீய வழியில் செலுத்த பல சந்தர்ப்பங்களை அளிக்கும். மித மிஞ்சிய நிர்வாக சக்தியும் சாமர்த்தியமும் உண்டாகும். சூழ்ந்திருப்போர் இவர்களை வஞ்சிக்க சமயத்தை எதிர்நோக்கி இருப்பார். இவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும். சுலபமாக போட்டிகள் பந்தயங்கள் முதலியவைகளாலும், தீய காரியங்கள் புரிவதாலும் செல்வம் சேரும். இவ் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருத்தல் நலம்.
இப் தேதியில் பிறப்போர் அச்சிந்தி ரசாலை, புத்தகம் வெளியிடுதல், பலவிதமான மில்கள் நடத்துதல், சக்கரங்களால் ஓடும் மோட்டார், சைக்கிள் முதலிய வாகன வியாபாரம் செய்தல், பஸ், லாரி, முதலியவைகளை வைத்து தொழில் நடத்துதல் இவைகளாலும். புத்தகம் எழுதுதல், சினிமா தியேட்டர் முதலியவைகள் நடத்துலாலும் மற்ற சனங்களின் ஆதரவால் நடக்கும் ஹோட்டல்கள், கடைகள், பந்தயங்கள், நடத்துவதாலும், கட்டிடங்கள் கட்டுவதாலும் மிகுந்த பணம் சம்பாதிக்கலாம். பல ஜனங்கள் உதவியோ, ஆதரவோ, ஈடுபாடோ, தேவையான எல்லாத் தொழில்களிலும் இவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். மேலோர் நட்பை இவர்கள் அடைய வேண்டியது மிக அவசியம்.
31-ந் தேதி பிறந்தவர்கள்:
இவர்கள் முழுவதும் மனோ சம்மந்தமான எண்ணிக்கையாதலா ல் இத் தேதியில் பிறப்போர் நல்ல தைரிய சாலியாகவும், மிக மிஞ்சின மனோ சக்திகளும், நுட்ப அறிவும் உடையவராகவும் இருப்பார். புதிதாக பழகுகிறவர்கள் கூட சில நிமிடங்களில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்று கண்டுபிடித்து விடலாம். லாப நஷ்டங்களை பொருட்படுத்தாமல் தன் இச்சைப்படியே நடப்பர். எப்படிப்பட்ட எதிரியையும் வெகு சீக்கிரம் மடக்கி விடுவார். ஏகாந்த வாசத்திலும் வேதாந்த ஆராய்ச்சிகளிலும் மனம் வெகுவாக ஈடுபடும். தீவிரவாதி, போகங்களில் மிதமாக இருப்பது அவசியம். பொகுஜன உபகாரி.
அதிர்ஷ்ட காலம் :
1,10,19 தினங்கள் அதிர்ஷ்டம் மளிக்கும்.4,13,22,31 தேதிகள் எதிர்பாராத மாறுதல்களைச் செய்விக்கும்.
துரதிஷ்ட தினங்கள் :
8,17,26 தேதிகள் எப்பொழுதும் தீமையே புரியும்.7,16,தேதிகளும் சாதகமான நாட்களல்ல.
வர்ணம் :
வெளிர் நீலம்,அல்லது நீலக் கோடுகள் போட்ட துணிகளே இவர்கள் மனதைக் கவரும். மிக்க அதிர்ஷ்டமான நிறம் மஞ்சளே. தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு.
இரத்தினம்:
வெளிரான நீல நிறக் கல்லே நன்மை தரும்.பரிசுத்தியையும் காரிய சித்தியையும் தரும். கோமேதகமும் மிக்க அதிர்ஷ்ட கர மானதே.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

