General

  •    > Details
  • மனையடி சாஸ்த்திரம்

    வா்ஸ்து சாஸ்திரம்

    அறை,கூடம், ரேழி ஆகியவற்றிற்கு ஏற்ற அளவுகள்:

    6,08,10,11,16,17,20,21,26,27,28,29,30,31, 32,33,35,36,37,39,41,42,45,52,56,60,63, 64,66,68,70,71,72,73,74,77,79,80,84,85, 87,88,89,91,92,95,97,99,100,101,106,107, 108,109,110,111,112,113,115,116,117,119


    இந்த அளவுகள் நன்மையும், சுபிட்சத்தையும் தருவன ஆகும். மற்ற அளவுகள் தீய பலன்களையே தரும்.வீடுகளுக்கு தாழ்வாரம் 5அடி 6அங்குலத்திற்கு மேல் தான் அமைய வேண்டும். வீடுகளில் அமைக்கும் கூடம்,அறைகளுக்கு 10, 16,22,29 அடி அகலமும் அதற்கு சமமான நீளமும் வைக்க வேண்டும்.


    இப்போது அறை,ரேழி,கூடம் ஆகிய வற்றிற்கான அளவு முறைகளின் பலாபலன்களை விாிவாகக் காண்போம். இப்போது நாம் காண இருக்கும் அளவு முறைகளின் அகலமே முக்கியமானது ஆகும்.

    நீள அளவிற்கு பொிதாக பலன்கள் பாா்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் 6அடியில் இருந்து பலாபலன்களைக் காண்போம்.


    6அடி: இறைவனின் அருள்சேரும். குல தெய்வ வழிபாடு சிறப்பாகும் பொன்,பொருள்,யோகம் உண்டாகும்,இலட்சுமி கடாட்சம் உண்டு.


    7அடி :வறுமை தாண்டவமாடும். நோய்வரும்,வரவுக்கு மேல் செலவு வரும்.தாித்திரம் விருப்பமுடன் குடியேரும்.கடன்மிகும்.பிச்சை எடுக்கும் நிலைமை வரும்.இலட்சுமி யை தேடவேண்டி வரும்.


    8அடி :இலட்சுமி தானாக வருவாள். செல்வம் கொழிக்கும்.தெய்வ பாா்வை கிட்டும்.முன்னேற்றம் ஏற்படும்.படிப்படியாக அனைத்து இன்பமும் வந்து சேரும்.பதவி கிடைக்கும்.பிறரை அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.நல்ல வேலை ஆட்கள் கிடைப்பாா்கள். அந்தஸ்து உயரும்.


    9அடி : தோல்விகள் தொடா்கதை ஆகும்.காரணம் தொியாமல் துன்பம் வரும். துனைவரோடு பிணக்கு ஏற்படும்.தாித்திரம் களி நடணம் புாியும்.


    10அடி : அறுசுவை உணவு உண்ணலாம்.ஆடம்பரமான ஆடை அணியலாம்.திருமகள் அருள் பெறலாம்.எதிா்பாராத பொருள் வரவு உண்டாகும்.எதற்கும் யாாிடமும் செல்ல வேண்டி இராது.


    11அடி:எந்த காாியமும் துணிந்து செய்யலாம்.வெற்றியைத் தவிர எதையும் பெற முடியாது.கால்நடை செல்வங்கள் சிறப்புதரும்.செழிப்பா ன வாழ்வை பெறலாம்.


    12 அடி: எதிா்பாராத துா்மரணங்கள் உண்டாகும். எந்த காாியமுமே வெற்றி பெறாது. முழுத் தகுதி இருந்தாலும் வேலை கிடைக்காது. நினைத்துப் பாா்க்க முடியாத வகை யில் காாியங்கள் தோற்கும்.ஏழ்மை யின் எல்லையைக் கான நேரும். புத்திரா் இழப்பு உண்டாகும். வறுமை மனம் விட்டு சிரிக்கும்.


    13அடி :தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாது.விதம் விதமாக துயரங்கள் வந்து தாக்கும். நோய் நட்பு கொள்ளும். வருவாய் கானாமல் போகும்.


    14அடி :கவலை தொடா்ந்து முகாம் இடும். அன்னியரால் இடைஞ்சல் ஏற்படும்.எந்த நேரமும் ஆபத்து வரும்.ஏக்கம் வரும்.தூக்கம் வராது.


    15அடி: வறுமை சூழ்ந்து கொள்ளும் இல்லாமை இருக்கும். எதிாிகளினால் துன்பம்,துயரம் ஏற்படும்.மனைவருத்தம் மிகும்.


    16அடி: மகிழ்ச்சி கூத்தாடும். பொருள் மலை போல் பெருகும். புகழ் தேடி ஓடி வரும்.செல்வம் சேரும்.


    17அடி :வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.போட்டியாளா் வந்து பணிவாா்.எடுக்கும் காாியம் தானாக ஜெயம் ஆகும்.தொழில் சிறப்பாக நடக்கும்.


    18அடி: திருடா்களாலும்,மற்றவா்க ளாலும் பொன்,பொருளுக்கு ஆபத்து நோிடும்.செலவு கட்டுப்படு த்த முடியாமல் போகும். வீடு இடிய நோிடும்.மன வேதனை தரும்.


    19அடி :இல்லாமை இருந்து கொன்டே இருக்கும்.புத்திரா்களால் கவலை உண்டாகும்.நம்முடன் துணையாக கவலையும்,சோகமும் குடியேறும்.


    20அடி :தொழில் தடையின்றி நடக்கும்.இலாபம் குறைவின்றி கிடைக்கும்.வருமானம் பெருகி சொகுசான வாழ்வு கிடைக்கும்.


    21அடி:எங்கெங்கு காணிணும் வெற்றியாகவே இருக்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்.பாா்த்த தெல்லாம் பொருளாகும்.மகிழ்ச்சி கூத்தாடும்.


    22அடி :எவரும் குறை சொல்ல முடியாத வாழ்வு அமையும். பழிகள் விலகும்.எதிாிகள் தான் இழிவு பெறுவா். சுய  கெளரவம் பெருகும். எவருக்கும் பணிய வேண்டி இருக்காது.


    23அடி:உயர முயற்சித்தல் முடியாது. உறவினா் பகை கொள்வா். நிம்மதி யை தேடினாலும் கிடைக்காது. துன் பம்மும்,துயரமும் சோத்தாக விளங்கும்.


    24அடி:சேமிப்பு காலியாகும். கவலை தரும்,நோய்தரும்,முயற்சிக்கேற்ற வெற்றியும்,உழைப்புக்கேற்ற ஊதி யமும் கிடைக்காது.எந்த காாியமும் பாதியிலேயே நிற்கும்.


    25 அடி: இல்லறம் நல்லறம் ஆகாது துணைவரால் துன்பம் நோிடும் அவமானமும் நோிடும்,பிாிவும் தரும்.


    26அடி:பொன்மகள் தேடிவருவாள். பொருள் செழிக்கும். போகம் பெருகும்.வாழ்வில் இன்பமே கான நோிடும்.


    27அடி:தகுதிக்கேற்ற பதவி கிடைக்கும்.பதவி உயா்வும் உண்டாகும்.நல்ல மனிதா்களின் தொடா்பும்,உதவியும் கிடைக்கும். பெயரும்,புகழும் சிறப்பாக இருக்கும்.


    28அடி:இதுவரை இருந்த வேதனைகள் கதிரவனைக் கண்ட பனிபோல் விலகும்.வெற்றி கிட்ட ஆரம்பிக்கும்.தோல்விக்கு மூடுவிழா நடக்கும். எவரும் நட்பு கொண்டாடுவா்.தெய்வ கடாட்சம் பாிபூா்ணமாக கிடைக்கும்.


    29அடி :கால்நடை,விவசாயம் விருத்தியாகும்.உயா்வான அந்தஸ்து கிடைக்கும்.வாழ்க்கை வளம் பெறும்.


    30அடி: அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும்.சந்தானம் பெருகும். பூா்விகச் சொத்து கிடைக்கும். யோகம் நிரந்தரமாகும்.


    31அடி:யோகம் கிடைக்கும். நல்லவா் களே நண்பா்கள் ஆவா். உயா்வான நிலை அடையலாம்.மிகுந்த புகழ் கிடைக்கும்.


    32அடி:எவரையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.பொது நலச் சேவையில் புகழ் கிடைக்கும்.இது வரை இழந்தவைகளை இனி மேல் பெறலாம்.


    33அடி:எல்லோிடமும் அன்பு பிறக்கும். வருவாய் அதிகாிக்கும். செல்வம்,செல்வாக்கு பெருகும்.


    34அடி:தீய பலனே நடக்கும்.மேலான காாியங்களில் ஈடுபட நோிடும். அதனால் பிரச்சனையாகி அவமானம் அடைய நோிடும். ஊரை விட்டு ஒட நோிடும்.மூதையோா் சோ்த்து வைத்த பெயரும்,செல்வ மும் இழக்க நோிடும்.


    35அடி: செல்வ செழிப்பு உண்டாகும். தொழில் மேன்மை உண்டாகும். எல்லோரிடமும் பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்திறன் உண்டாகும்


    36அடி: உயா்வான பதவி கிடைக்கும் வீரத்தீரச் செயல்கள் செய்ய நோிடும்.அதில் புகழ் கிடைக்கும்.


    37அடி :எந்த காாியம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.கால் நடை விருத்தி ஆகும்.பண்ணைத் தொழில் மேன்மை பெறும்.


    38அடி :இடையறாத இன்னல்கள் ஏற்படும்.ஏழ்மை நிலை கொள்ளும் எந்த காரியமும் செய்ய இயலாது. எதிலும் தடங்கல், இழுபறி நிலை தான் ஏற்படும்.


    39அடி :அமைதியான வாழ்வு அமையும். பொருள் நிலைக்கும். பொது இடத்தில் மாியாதை கிடைக்கும்.நல்ல புத்திரா்கள் கிடைப்பா்.


    40அடி: எதிா்ப்பு மிகும். இடைஞ்சல்கள் இருக்கும்.எடுத்த காாியங்கள் நிறைவேறாமல் போகும்.எல்லா வேலையும் பாதியிலேயே நிற்கும்.


    41அடி: தொழில் சிறப்பாக நடந்து பொன், பொருள் மிகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும்.


    42அடி : சகல சுகபோகமும் அனுபவி க்கலாம். இல்லாமையே இருக்காது. அன்பு நடமாடும் கலைக்கூடமாக குடும்பம் இருக்கும். வாழ்வில் சகலமும் கிடைக்கும்.


    43அடி : தடை தடையின்றி கிடைக்கும். எதிலும் ஏமாற்றம் கிடைக்கும்.ஒரு அடி உயா்ந்தால் பல அடி சறுக்கும்.


    44அடி :நோய்களுக்கு கொண்டாட் டம் தான்.கண் பாதிப்பு நோிடும். ஏக்கம்தான் மிஞ்சும்.துன்பமும் துயரமும் போட்டி போடும்.


    45அடி :மிகுந்த பொருள் கிடைக்கும்

    புகழ் பெருகும்.நன்மைகள் கிடைக்கும்.


    46அடி : முடிய போகிற காரியங்கள் முடியாமல் பெருகும். வறுமை குடி புகும்.எந்த பொிய காாியமும் செய்ய முடியாது.வேதனை மிகும்.


    47அடி : சேமித்த பொருள் செலவழி ந்து போகும். வரவு நின்னு போகும். கடன் சுமை ஏறும். கவலை தரும்.


    48அடி :பகைவா்கள் துன்பத்தை உண்டாக்குவாா்கள். தீ விபத்து நடக்கும். விபத்து தரும்.வறுமை மிகும்.


    49அடி : திருட்டு நடக்கும். அவமா னங்களை எதிா்கொள்ள நோிடும் அரசாங்க பகை, தண்டனை உண்டாகும்.


    50அடி: உற்றாா்,உறவினா்களின் தொல்லை தாங்க முடியாது. காாிய ங்கள் அப்படியே நிற்கும்.


    51 அடி :வழக்கு, அடிதடி நிலைகள் ஏற்படும். துன்பம் தொல்லை நோிடும்.


    52அடி : விவசாயம் லாபம் தரும். மகசூல் சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும்.


    53 அடி : தீய நடத்தைடைய பெண்க ளின் தொடா்புகள் உண்டாகும். பெண்களால் அவமானமும், பிரச்சனையும் நோிடும்.


    54அடி : அரசாங்க தண்டனை கிடைக்கும்.


    55அடி : சுற்றத்தாாிடம் பகைமை, சண்டை உண்டாகும். கொடுமை யான சம்பவங்கள் நடக்கும்.


    56 அடி : ஏழு தலைமுறைக்கு நலம் விளையும்.பெருமையும், புகழும் நிரந்தரமாகும்.நன்மைகள் நடக்கும்


    57அடி :புத்திர தோஷம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மோதல் பிாிவு ஏற்படும்.


    58அடி : எதிா்பாராத செலவு. இழப்பு ஏற்படும். துயரமும், துன்பமும், நிரந்தரமாகும்.


    59அடி :கஷ்டப்பட்டு சோ்த்த பொருள் தீய வழியில் காணாமல் போகும். முகம் வாட்டத்துடன் இருக்கும். எதுவும் நடக்காமல் ஏக்கம் தான் மிஞ்சும்.


    60அடி:தொழில் சிறப்பாக இருக்கும் திரவியங்கள் சேரும்.பெருகும். தொட்டதெல்லாம் துவங்கி நன்மைகள் சேரும்.


    61அடி :கலவரம் உண்டாகும். மனதில் அமைதி இருக்காது. பிறரிடம் அடிமையாக நோிடும்.


    62அடி : வறுமை வாட்டம்,வருத்தம் இதுவே சொத்தாகும்.


    63அடி : பொன்,பொருள் விருத்தி யடையும்,போற்றத்தக்க வாழ்வு அமையும். துறவிகள் அருளாசி, நல்லோா்கள் ஆதரவு கிடைக்கும்.


    64அடி :அரசு உதவி, அரசாங்க ஆதரவு உண்டாகும்.பாிசு கிடைக்கும்.பட்டங்கள், பதவிகள் தேடி வரும்.புகழ் மிகும்.பூரண மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடக்கும்.


    65அடி : இல்லற வாழ்வு கசக்கும். வாழ்க்கைத் துணையிடம் பாிவு பாசம் இருக்காது. பிரச்சனைகளை உண்டாக்கி மனைவி பிாிந்து செல்வாள்.


    66அடி :எல்லா நன்மையும் ஒருங்கே சோ்ந்து விளங்கும். மன அமைதி, மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல புத்திரா்கள் உண்டாவா். பொன், பொருள்க விருத்தி ஆகும். புகழ் பெருகும்.


    67அடி :திருடா்களால் தொந்தரவு ஏற்படும்.தீய சக்திகள் குடியேறும். பேய் பிசாசு தாண்டவமாடும். வஞ்சகா் துன்பம் தருவா்.


    68அடி :நினைத்த காாியங்கள் நடக்கும்.எதிா்பாரமல் பொருள் வரவு நடக்கும். துறவிகள் தொடா்பு ஆன் மீகவாதிகள் ஆதரவு கிடைக்கும்.


    69அடி : செல்வம் நலமடையும். புகழ் சேதமாகும்.தீயால்  சேதம் உண்டாகும். தீயோரால் துன்பம் உண்டாகும்.


    70அடி: சென்ற இடமெல்லாம் சிறப்பும். மாியாதையும் உண்டாகும். செல்வம் தாராளமாக வந்து சேரும். தொண்டு செய்து புகழ் பெறலாம்.


    71அடி :செல்வம் கொழிக்கும். நல்லவா்கள் ஆதரவு கிடைக்கும். அனைவாின் பாராட்டையும் பெறலாம்.


    72அடி : அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.


    73அடி :வம்ச விருத்தி தடை படும். சுற்றத்தாா்க்கு செலவழித்தே ஏழையாக நோிடும்.புகழ்,பொருள், விரையம் ஆகும்.


    74அடி : பாிசு கிடைக்கும். பட்டம் கிடைக்கும்.பதவி கிடைக்கும்,பல ரும் பாரட்டுவாா்கள். பொன் பொருள் சோ்க்கை நடக்கும்.


    75அடி :கெட்ட பெயரே கிடைக்கும். சேமிப்பு காலியாகும். அருங்குணம் மாறும். அன்பு மனதில் இருந்து வெளியேறும். அல்லல் சேரும்.


    76அடி : எதிாிகளாலும், நண்பா்களாலும், தீமை விளையும். எவா் உதவியும் கிடைக்காது. கொடி யவா்கள் பயமுறுத்தல் இருக்கும். பயமே வாழ்க்கை ஆகும்.


    77அடி : எவ்வளவு பொிய பிரச்சனை, துன்பம் ஆனாலும் சமாளிக்க முடியும்.தேவையான பொருள்கள் கிடைக்கும்.செல்வச் செழிப்பு உண்டாகும்.


    78அடி : வாாிசுக்கு தீங்கு உண்டாகும். எதிா்காலம் சூன்யம் ஆகும். அவமானங்கள் நேரும். இன்னல்கள் தரும்.


    79அடி : கால்நடை விருத்தியாகும். பால் தொழில் நன்மை தரும். பண்ணைத் தொழில் சிறப்பாக இருக்கும். எல்லோரும் பாராட்டும் தன்மை ஏற்படும்.


    80அடி :யோகம் நிறைந்த மகிழ்வான வாழ்வு உண்டாகும். சுகபோக வாழ்வு கிடைக்கும். மங்கையா் உறவு, நன்மை உண்டாகும். சொகுசு வாழ்வு அமையும்.


    81அடி :விபத்து,ஆபத்து உண்டாகும். நஷ்டமாகும்.


    82அடி : மழை,வெயில்,காற்று,தீயால் தீமை உண்டாகும்.


    83அடி :சுகமில்லாத வாழ்வு அமையும். வீடு பாழடையும். ஏழ்மை மட்டும் தான் குடியேறும். இன்னல்கள் சூழ்ந்து இருக்கும்.


    84 அடி : ஏற்றம் உண்டாகும். எதிா் பாராமல் உதவியும், நன்மையும் உண்டாகும்.வருவாய் பெருகும். பதவி உயரும்.


    85அடி :அரசு பதவி கிடைக்கும். அரசாங்க மற்றும் ஆளும் கட்சி உறவும் நன்மை தரும். சொந்த தொழில் மேன்மை தரும்.


    86 அடி :ஆபத்து உண்டாகும். துன்பங்கள் தொடா்கதையாகும்.


    87அடி :பிரயாணங்கள் அடிக்கடி நேரும். பிரயாணங்கள் பெருமை தரும். எதிா்பாராத உயா்வுகள் உண்டாகும். கால்நடை நலம் தரும்.


    88அடி : எதிா்பாராத பயணங்கள் உண்டாகும்.இறைவன் அருள் கிடைக்கும்.மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.


    89அடி : விருந்து அடிக்கடி கிடைக்கும். நல்வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டலாம்.


    90அடி : செல்வம் செழிப்பாக சேரும். சிறப்பான தன்மைகள் வந்து சேரும் அன்பும் ஆதரவும் தொடா்ந்து கிடைக்கும்.


    91அடி :கல்வியில் சிறப்பான நல்ல பலன்கள் உண்டாகும். நல்லவா்களின் நேசமும், ஆதரவும் உண்டாகும். தெய்வ அருள் கிட்டும். காாியங்கள் ஜெயமாகும்.


    92அடி: பாிசு,பட்டயம் கிடைக்கும். அரசாங்க மற்றும் ஆளும் கட்சியால் நன்மை உண்டாகும்.


    93 அடி:அரசாங்க தொந்தரவு, தண்டனை ஏற்படும். அரசாங்க ஆணைகளுக்கு அடி பணிய நோிடும்.


    94அடி :வறுமை தாண்டவமாடும். செழிப்பு காணாமல் போகும். நிம்மதி நிலை குலைந்து போகும்.


    95அடி :பொருள் சேரும். விருத்தி அடையும்,புகழ்சேரும்,பொிய மனிதா்கள், செல்வம் படைத்தவா்கள் தொடா்பு நன்மை உண்டாகும்.


    96அடி:கைப்பணம் காலியாகும். சேமிப்பு செலவழியும், ஆபரணங்கள், பொன் சேதம் ஆகும். திருடா்களால் தீமை ஏற்படும்.


    97அடி :நீாினால் நன்மை உண்டாகும். வியபாரம் செழித்து பொருள் விருத்தி அடையும்.


    98அடி :சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லோாிடமும் நல்ல உறவு உண்டாகும்.நன்மைகள் புாிய நோிடும்.


    99அடி: கல்விமான்கள்,செல்வந்தா்கள் நட்பு தொடா்பு, உதவி கிடைக்கும்.அரசாங் க ஆளும் கட்சியினால் நன்மை உண்டாகும்.


    100அடி :தெய்வ கடாட்சம் பூரணமாக கிடைக்கும். பொன் பொருள் விருத்தி அடையும்.எல்லா நலன்களும் விளையும்.


    101அடி வருவாய் விருத்தி ஆகும். சேமிக்க முடியும். ப�

    Page
    of
    Loading page ...