P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
நவகிரக தோசங்கள்&பரிகாரங்கள்
ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கலை
சூரியன் தோஷம் விலக ...
உங்களுக்கு சூரியதோஷம்
இருந்தால் என்ன பிரச்சனை வரும்.
அதற்கு என்ன பரிகாரம்
சூரியன்
பிதுர்காரகன். அதாவது தந்தைவழி
உறவுகளின் அமைப்பில் சாதக
பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு,அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே
காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு
கெட்டிருந்தால், தந்தை வழி
உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும்.
பூர்வீக சொத்தில் வில்லங்கம்
ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை,கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம்அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி
வரும். சட்டப்புறம்பான நபர்களால்
மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம்
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம்
சூரியன் அமைப்பு சரியில்லையாதலால்,
அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை
பாதுகாப்பது எப்படி?
உங்களுக்கு
சூரியதோஷம் இருந்தால்,
அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.
தாமிரத்தால் செய்த
இஷ்டதெய்வ டாலர் அல்லது
அனுமன் டாலரை அணிந்து
கொள்ளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது
உங்கள் வீட்டு பூஜையறையில்
பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து
வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.
சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.
முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர்
செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற
அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம்
செய்துவிட்டு சூரியனுக்குரிய
தானியமான கோதுமையால் ஆன இனிப்பு
வகைகளை இயன்ற அளவு தானம்
செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப்
போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு
முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில்
நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள்.
இதில் உங்களால் முடிந்ததை
செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக
விலகும்.
சூரிய துதி
*************
காசினி இருளை நீக்கும்
கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு
சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த
தேசிகா எனைரட்சிப்பாய்
செங்கதிரவனே போற்றி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி
சந்திரன் தோஷம் விலக ...
உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன
பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம்.!!!!
********************************
சந்திரன் மாத்ரு காரகன். அதாவது
தாய்வழி உறவுகளால் ஏற்படும்
பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும்
ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி
பாதிக்கப்படுதல், தாய்வழி
சொத்துக்களில் இழுபறி, பதவி,
புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற
பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை
பாதுகாப்பது எப்படி?
ஜனனகால
ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ
உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால்
திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது
உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம்
பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி
பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச்
சென்று அங்கு நடைபெறும்
அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு
இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக்
கொடுங்கள். ஈயத்தினால்
செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை
அணிந்து கொள்ளுங்கள்.
பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும்
கலந்து கொடுப்பதும் சிறப்பான
பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர்
ஆலயத்திற்குச் சென்று
கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும்
வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு
பால், இனிப்புகளை பிரசாதமாக
விநியோகம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன்
கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள்.
எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும்
சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும்
சொல்லுங்கள். இதில் உங்களால்
இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே,
சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல்
ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி
படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை
தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள
அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என
இயன்றதைச் செய்து வழிபடுவது
சிறப்பான பலன் தரும். குறைந்தது 3
நெய் தீபங்களையாவது ஏற்றி
வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக்
குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.
தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர
விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச்
சென்று பெருமாளையும்,
தாயாரையும் தரிசித்துவிட்டு,
வெண்பொங்கல் பிரசாதம்
விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது.
முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை
அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக்
குறைக்கும்.
சந்திர துதி
*************
அலைகடல் அதனினின்று மதியும் வந்து
உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர்
எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன்
செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி
பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய்
போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி
செவ்வாய் தோஷம் விலக .....
உங்களுக்கு செவ்வாய் தோஷம்
இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்குஎன்ன பரிகாரம்.!!!!
********************************
சகோதர உறவுகளுடன்
ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம்
அடிக்கடி சீர்கெடும். பூர்வீக
சொத்துக்களான நிலம், வீடு
சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும்.
சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள்
அடையாமல் அதிகரித்துக் கொண்டே
போகும். ரத்த அழுத்த மாறுபாடு,
ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி
காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை
உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு
மாதாந்திர உபாதைகளில் சிரமம்
இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள்
ஏதாவது ஒன்று மாறி மாறி
கஷ்டப்படுத்தக்கூடும்.
செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை
பாதுகாப்பது எப்படி?
செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில்
6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை
பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில்
ஏற்றி வையுங்கள். செம்பு
உலோகத்தாலான டாலர் அல்லது
காப்பை அணிந்து கொள்வது
நல்லது. முருகன் (அ) துர்கை
டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி
அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று
முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக
சன்னதி செவ்வாயையும் வழிபட்டு
வாருங்கள். முடிந்தால் பழநிக்குச்
சென்று அங்குள்ள முறைப்படி
முருகப்பெருமானை தரிசனம்
செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில்
சென்று அங்குள்ள அங்காரகனுக்கு
அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும்.
ரெட்கார்னெட் டாலர்
அணிவதும், ரெட்கார்னெட்
கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு
ஏற்ப செய்யலாம். வாயில்லா
ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக்
கொடுங்கள்.
அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு
அர்ச்சனை செய்யுங்கள். உங்கள்
பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது
நல்லது. இதில் உங்களால் முடிந்ததை
செய்யுங்கள். செவ்வாய் தோஷம்
விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
செவ்வாய் துதி
*******************
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில்
வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில்
வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில்
அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய்
குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய்
போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
புதன் தோஷம் விலக:
உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்னபிரச்சனை வரும்
அதற்கு என்ன பரிகாரம்.!!!!
********************************
புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி,
கலை போன்றவற்றுக்குக் காரணமானவன்.
புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால்
படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம்
போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள்
தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற
பொதுவான பிரச்சனைகள்
ஏற்படக்கூடும்.
அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான
குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல்
நிறமாற்றம், முக அழகு குறைதல் புத
தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில்
இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
புதன் அமைதியான கிரகம், எனவே
அமைதியாக, மென்மையாக இருக்கப்
பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட
டாலர் அல்லது காப்பினை அணிந்து
கொள்ளுங்கள். அடிக்கடி
பெருமாள் கோயிலுக்குச் சென்று
துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள்.
பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம்
அல்லது பால்பாயாசம் பிரசாதமாக
விநியோகம் செய்யுங்கள்.
புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள்
வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய்
ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள்.
புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி
மனதாரக் கூறுங்கள்.
பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது
கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி
நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து
வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி
சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது.
நாகப்பட்டினம் திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச்
சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு
வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை
செய்யுங்கள். புதன் தோஷம் விலகி
உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.
புதன் துதி
*************
இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய்
பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி
மதனநூல் முதலாய நான்கு மறை புகல்
கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன்
திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல
கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல்
போற்றி போற்றி.
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.
குரு தோஷம் விலக:
**************************
நமக்கு கிரகங்களினால் தோஷம்
ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய்
முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு
தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால்
பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு
என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும்
கற்று தருவார். வியாழன்,
புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின்
ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன்
அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள்
உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட
பிரச்னைகள், வியாழ தோஷத்தால்
ஏற்படலாம். ஞாபக மறதி,
பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள்,
வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த
மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு,
படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள்
மாறி மாறி வரலாம். செலவு
இரட்டிப்பாகும்.
வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை
பாதுகாப்பது எப்படி?
வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு
பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி
தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள்.
ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம்,
தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய
தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று
மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக்
கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும்
குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு
விநியோகம் செய்யுங்கள். உங்கள்
வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை
அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு
ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது.
அவரவர் வசதியைப் பொறுத்து
மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர்
அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது
நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது
அல்லது கோயில் யானைக்கு மஞ்சள்
வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக்
கொடுங்கள். குரு காயத்ரி,
தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும்
சொல்லுங்கள். இதில் உங்களால்
முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம்
நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக்
கிட்டும்.
வியாழன் துதி
******************
குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்
கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொ
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

