NAKSHATRA PALANGAL

  •    > Details
  • ஆயில்யம் நட்சத்திரம்

    ஆயில்யம் நட்சத்திரம்
    ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தலைமை பண்பு, அரசியல் வெற்றி,  ஞானமான இயல்பு, ஜோதிடத்தில் திறமை, எதையும் முன் உணர்வர்,  எழுத்து, பேச்சு, இரண்டிலும் வல்லவர்.  கவிஞர், படைப்பாளி, நிர்வாகத் திறமை கொடுத்து ஆய்வு செய்பவர்.  உணவு கட்டுப்பாடு தேவை.  சிறு வயது  திருமணத்தால் பாதிப்புகள்.  உண்மையற்றவர். நன்றி அற்றவர்,  பாவம் நிறைந்தவர்.

    பொதுவான குணங்கள் :

    அதிகமான சக்தியை தரும் நட்சத்திரம்.  இதில் பிறந்தவர்கள் பிறருடைய மனதையும்,  ஆத்மாவையும்,  ஊடுருவி பார்க்க வல்லவர்கள்.  பாரம்பரியம்,  காமம்,  அந்தஸ்து  இவைகளை அடைவது  என்ன  சிக்கல் இருந்தாலும்  அவற்றை  எதிர்கொண்டு  வெற்றி கொள்வார்கள்.  தத்துவம்,  சிந்தனை ஆக்கம்,  ஊடுருவும் புத்திசாலித்தனமான மனம் இவர்களுக்கு உண்டு.  அவரவர் வேலையை அவரவர் சரியாக செய்ய வேண்டும்  என்று சொல்வார்கள்.  ஏனென்றால்  எதுவும்  சரியாகவும்,  தெளிவாகவும்  இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  இவர்களைப் பேசி ஜெயிக்க முடியாது.  இவர்களை  விட விவரமாக  பேசுபவர்கள்  இருந்தாள்  இவர்கள்  தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டு  வேறு காரியங்களில் ஈடுபடுவார்.  எல்லோரும்  எப்போதும்  தங்களை மதிக்கும்படியாக கையாள்வார்கள். ( அடிமைப்படுத்துவார்கள்) தன்னைவிட அதிக அதிகாரம் உள்ளவர்களிடம்  மிகவும் நடந்து கொள்வார்கள்.  கூர்மையான அறிவு,  எளிதில் உணர்வு வசப்படுதல், கோபப்படுதல் இவர்களின் இயல்பு.


      தொழில் :

    அரசியல்வாதி, வக்கீல், ஆசிரியர்,  ஜோதிடர்,  ஞானி, பாம்பாட்டி,  மிருக காட்சி சாலையில் பணிபுரிபவர்,  விலைமாது, விலை மாதுகளுக்கு வேலை செய்பவர்.

    நோய்:

    விஷ உணவுகளால் ஏற்படும் நோய்கள்.  வயிற்றுப் பிரச்சினையால் வரும் நோய்கள்,  வீட்டு வாதம்,  நரம்புத் தளர்ச்சி.


    [  ] அடையாளம்:

    சுருண்டு, சுற்றி வளைக்கும் பாம்பு,  இது அதிகாரங்களை வளர்த்துக் கொள்ளுதலையும் தலைமை பொறுப்பு  தேடுவதையும் குடும்பத்திற்கு தலைவனாக நினைப்பதும் இவருடைய குணம்.

    [  ] மிருக அடையாளம் :

    ஆண்- பூனை  ஆயில்யம் சாரத்தில்  ஒரு கிரகம் இருந்து  தசா புத்தி நடந்தால்  குடும்பத்தில் அமைதி இருக்காது.  சண்டை ஏற்படும்.  ஆண் பூனை  ஆக்கிரமிப்பு குணம் கொண்டது.

    [  ]  அதி தேவதை :

    பாம்பு கடவுள், நாகராஜ், ஆதிசேஷன்

    இயல்பு :  ராட்சசன் கணம்

    [  ]  முக்கிய குறிக்கோள் :

    தர்மம், பொதுக் காரியத்தில்  தான் தான் என்று தயக்கம் இன்றி இறங்குவது.  தான் கற்றதை  செயல்படுகின்ற இடத்தில் தனக்கென்று ஒரு அதிகாரத்தையும்,  முக்கியத்துவத்தையும் தேடிக் கொள்ளும் குணம்.

    [  ]  புதன் பயோடேட்டா :

    நிறம்     :  பச்சை
    மலர்       : வெண்காந்தம்
    தேவதை:  விஷ்ணு
    வடிவம்    : அம்பு
    சமித்து    : நாயுருவி
    வாகனம்  : குதிரை
    தானியம் : பச்சைப்பயிறு
    உறுப்பு    : தோல் ,கழுத்து
    பாலினம் : அலி
      கோவில் : மதுரை ரங்கநாதர்
    அதிகாரம் : இளவரசர்
      திசைவருடம் :17 வருடம்
    உணவு            : பால் பாயாசம்