Parigaram

  •    > Details
  • ராகு, கேது, தோஷங்கள், பரிகாரங்கள்

    ராகு-கேது, விளக்கம்- பரிகாரம்

    ராகு கேது தோஷம் என்பது முக்கியமாக ராசி அல்லது லக்கினத்திற்கு 2, 7ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பதை சொல்லப்படுகிறது.


     ராகு கேதுக்களில் இருவரில் ஒருவர் இரண்டில் இருந்தால் மற்றவர் எட்டில் இருப்பார். அதுபோல் ஏழில் ஒருவர் இருந்தால் மற்றவர் லக்னத்தில் ராசியிலோ இருப்பார். இதுவே ராகு கேது தோஷம் என சொல்லப்படுகிறது.


     ஆனால் நடைமுறையில் ராகு கேதுக்கள் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்த பாவகத்தில் தடை தாமதங்களை உண்டு பண்ணுவார்கள்.


     உதாரணத்திற்கு 7ல் ராகு கேதுக்கள் இருக்க திருமணம் தாமதம் ஆவது அன்னிய துணையுடன் திருமணம் அமைவது போன்றவற்றை செய்வார்கள்.


     பொதுவாக ராகு கேதுக்கள் ஒரு பாவத்தில் இருந்தால் அவர்களே அந்த பாவகத்தின் பலன்களை செய்வார்கள். அதாவது அவர்களின் தசா புத்திகள் வரும் வரை அந்த பாவகம் தொடர்பானதை ஜாதகருக்கு கிடைக்க விடமாட்டார்கள்.


     ராகு கேது தோஷத்தை பொத்தம் பொதுவாக எண்களில் எடுக்காமல் இருவரும் அமர்ந்த ராசி ராகு கேதுக்களை பார்க்கும் மற்ற கிரகங்களின் நிலை,ராகு கேதுக்களின் நவாம்ச நிலை நீங்கள் எந்த லக்னம் என அனைத்தையும் சேர்த்து சீர்தூக்கி பார்த்தாலே ராகு கேது தோஷம் வேலை செய்யுமா?அல்லது செய்யாதா?தாமதமாக பலன்களை செய்யுமா?அல்லது பலன்களை தடுக்குமா?போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும்.


     ராகு -கேது தோஷ பரிகாரங்கள்:

    அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும். ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.


    * எனினும் சர்ப கிரகங்கள் சாதகமாக இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் வீட்டிலேயே சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் ராகு கேது தோஷங்கள் நீங்க பெறலாம் என்று வழிகாட்டப்படுகின்றன சாஸ்திரங்கள்.


    * வீட்டில் வட மேற்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் உள்ள இடங்களில் பறவைகளுக்கு தானியங்களும் பருக சிறிது நீரும் வைத்து வந்தால் ராகு கேது தோஷங்கள் விலகுவதோடு பட்சி தோஷமும் விலகும்.


    * செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புற்று உள்ள கோவில்களுக்கு சென்று அங்கிருக்கும் புற்றுக்கு பூக்களை சாத்தி, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து,நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து வணங்கி வருவது மிகச்சிறந்த பரிகாரமாகும்.


    * தினமும் கோளாறு பதிகம் பாராயணம் செய்து வந்தால், ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷங்கள் விலகி ஓடும்.


    * ஹோம திரவியங்கள், தூப பொருள்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிற போர்வைகள், சீயக்காய் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தானம் செய்வது, சிறந்த பரிகாரம் எனலாம். 


    * ஜாதகத்தில் கேது சாதகம் இல்லாமல் இருந்து,அனைத்து விஷயங்களிலும் மந்த நிலையை கொடுத்துக் கொண்டிருந்தால், வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடைகள், கம்பளி போர்வைகள், நெல்லிக்காய், மாங்காய், ஊறுகாய் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டும். தெரு நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் பால் அண்ணன் கொடுத்து வர தோஷங்கள் படிப்படியாக குறையும் என்கின்றன ஜோதிட நூல்கள்