P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கடுமையாக உழைத்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களைக் கொண்ட மகர ராசிக்காரர்கள் எடுக்கும் வேலையை மின்னல் வேகத்தில் முடிக்கும் தன்மை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.
இதுவரை உங்கள் சுகவீடான 4 - ல் அமர்ந்து எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவகையில் பாடாய்படுத்திய குருபகவான் 1.5.24 முதல் 14.5.25 வரை 5-ம் வீட்டில் நுழைந்து அள்ளிக் கொடுப்பதுடன்,வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார்.
குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவும், வாக்குவாதமும் இருந்ததே! ஒரே வீட்டுக்குள் ஒட்டுறவு இல்லாமல் பிரிந்துதானே இருந்தீர்கள். அந்த நிலை மாறும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும். படுத்த படுக்கையாய் இருந்த தாய் எழுந்து நடப்பார். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கல்யாண நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்பட்டீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் முகம் மலரும். குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அவர்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள். அரசியவாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். தொலை தூரப் பயணங்கள் உண்டு. வேற்று மதத்தினர், மொழியினர் உதவுவார்கள். ஆனால் சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகனம் அமையும். வசதியான வீட்டிற்கு இடமாறுவீர்கள். பிள்ளைபாக்கியம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். புது வாகனம், சொத்து அமையும். வி.ஐ.பிகள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். செல்வாக்குக் கூடும்
வியாபாரம் : புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய முதலீடுகள் போடுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கணினி, உணவு, எண்டர்பிரைஸ், கமிசன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகம் : உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்களின் இனி நட்புறவாடுவார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களே! மறைந்திருந்த தகுதியை வெளிப்படுத்துவீர்கள். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.
ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளால் சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

