P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
காலபுருஷ தத்துவத்தில் முதல் ராசி மேஷம். இதில் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடக்கம். செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷராசிக்காரர்கள் அனைத்திலும் முன்னணியில் இருக்க முயல்பவர்கள். அப்படிப்பட்டவர்களைக் கடந்த ஓர் ஆண்டாக ராசிக்குள் அமர்ந்த குருபகவான் முடிக்கினார். இதனால் பணவரவில் தாமதம், வேலை பதவிகள் கிடைப்பதில் தடை, ஆரோக்கியத்தில் தொடர்ந்து பிரச்னை என்று ஏதேனும் ஒன்று இருந்துகொண்டே இருந்தது. இந்த ஆண்டு மே - 1 - ம் தேதி முதல் குருபகவாம் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் அடியெடுத்துவைக்க இருக்கிறார். இனி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். திருமணம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். குழந்தை பாக்கியத்துக்காக இதுவரை பரிகாரங்கள், வைத்தியங்கள் என்று செய்துபார்த்து ஏமாந்தி போயிருந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு அழகான குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
இதுவரை அடுத்தவர்கள் புண்படும்படிப் பேசி பலரின் நட்புகளை இழந்தீர்களே... இனி பேச்சில் இனிமை கூடும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் பலவழிகளிலும் வரும். வீடு மனை வாங்கும் ஆவல் பிறக்கும்.
குரு பார்வை பலன்கள்
குருபகவானின் பார்வை 6,8,10 ஆகிய வீடுகளில் விழுகிறது. 6 -ம் வீடான கன்னியை குருபார்ப்பதால் இனி கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வீடு வாங்கப் புதிய கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பிரச்னைகொடுத்த சத்ரு இனி ஓடி ஒளிவார். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.
குருபகவான் 8 -ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.
குருபகவானின் பார்வை 10 - ம் வீட்டில் விழுவதால் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியன தேடிவரும். தொல்லைதந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் மாறிப்போவார்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புது வழி பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும்.
12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, நெஞ்சு வலி குறையும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீடு கட்ட தாமதமான ப்ளான் அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான தூக்கம் வரும்.
19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் ராசிநாதானான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகாவன் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும்.
வியாபாரம் : உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை அலங்கரிப்பீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகம் : எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனிப் பணிந்து போவார். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர்கள் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.
இந்த குரு மாற்றம் பிரச்னைகளின் பிடியிலிருந்து விடுபட வைப்பதுடன் வாடியிருந்த உங்கள் வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்குவதாக அமையும்.
!!!வாழ்க வளமுடன்!!!
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

