Rahu Kethu

  •    > Details
  • மீனம்(ராகு−கேது)பெயா்ச்சி

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனப் போராட்டங்களையும், வீண் அலைச்சலையும், காரியத் தடைகளையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் படபடப்பான உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் விருப்பத்துக்காக, அவர்கள் விரும்பாத பாடத்தில் சேரும்படி வற்புறுத்தாதீர்கள். மகளுக்கு, நல்ல இடத்தில் வரன் அமையும். பணவரவு அதிகரிக்கும்.

    கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைப்பதால் உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். குறை கூறியவர்கள் புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.