Rahu Kethu

  •    > Details
  • மிதுனம்(ராகு−கேது)பெயா்ச்சி

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்து கொண்டு பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுயமாக தொழில் செய்யும் வல்லமை கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதி கரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.

    கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளையும், பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதட்டத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்.