NAKSHATRA PALANGAL

  •    > Details
  • மிருகசீரீடம் நட்ச்சத்திரம்

                         மிருகசீரிடம்
            நட்சத்திர பொது பலன்கள்
    மிருகசீரிடத்தில் பிறந்தவர்கள்  புத்தி கூர்மை,  எழுத்துத்திறமை,  அரசியல் திறமை,  செல்வாக்கு, செல்வம்,  உணர்வு பூர்வமான செயல்,  அழகு,  தொழில் கூட்டாளிகளால் சிக்கல்கள் இருக்கும்.  ராகு தசை கடந்தால்  குரு திசையில் இருந்து நன்றாக இருக்கும்.

    நல்ல குணங்கள் :  மிருகசீரிடம்  ஒன்று இரண்டு  பாதங்கள்  அழகன்  தேஜஸ் உள்ளவன்.  முக வசீகரம்  உண்மையைக் காண்பதில் ஆர்வம்.  எத்தனை முறை தோற்றாலும்  வெற்றி  அடைய முயற்சிப்பவன்.  வாழ்க்கையில்  ஒவ்வொரு நிமிடமும்  முழு திருப்தியை  குறிக்கோளாகக் கொண்டவன்.  எதையும் நம்புவான்.  தெய்வம்சம் உள்ளவன்.  பலரிடம் கேட்டு ஆய்வு செய்து  அனுபவத்தில் சரி பார்த்து உண்மையை அறிபவர்.  பொருள் சேர்ப்பதில்  நிலத்தை உடமையாக்கி கொள்வதில் சமர்த்தர்.  நாகரிகமான  அமைதியான  உணர்வு பூர்வமான  குறிக்கோளை உடையவர்.  மற்றவர்களிடம்  தயங்கி  தயங்கி  உதவி கேட்பார்.  மற்றவர்களை   ஆகா்ஷிப்பவா்.  ரிஷபம்- மிருகசீரிடம்  கடவுள் பக்தி  சென்டிமெண்ட் அதிகம்.
    மிதுனம் - மிருகசீரிடம்  கடவுள் பக்தி கிடையாது.  அறிவு உண்டு.  பகுத்தறிவு உண்டு.  கடவுள் நம்பிக்கை,  ஜோதிட நம்பிக்கை கிடையாது.Analytical Mentality  அதிகம். அனுபவத்தில்  பாடம் படிப்பார். ஒரு விஷயத்தை  உருவாக்கு  பிறருக்கு  பயன்படுவதும்  இவர்களின் இயல்பு.

    தொழில் ஈடுபாடு :
    எழுத்தாளர், கவிஞர், ஜோதிடர்,  ஆசிரியர், பொறியாளர், ரத்தினங்களை பரீட்சை செய்பவர்.  நடிப்பு, நாடகம்,T.V.Serialல்   நடிப்பவர்.  இசைக் கலைஞர். ரியல் எஸ்டேட்,  விற்பனை பிரதிநிதி,  டிராவல் ஏஜென்ட்,

    நோய்கள் : குரல் நாண்,   தொண்டை பிராப்ளம்,  மலச்சிக்கல்,  பால்வினை நோய், தொடை, நரம்புகளில் பிராப்ளம்.

    செவ்வாய் பயோடேட்டா:
    நிறம்  : சிவப்பு
    மனைவி : சக்தி தேவி
    ரத்தினம் : பவளம்
    மலர்         : செண்பகம்
    தேவதை  : முருகன்
    சமித்து     : கருங்காலி
    திக்கு        : தெற்கு
    தானியம்  : துவரை
    நாடி           :  பித்த நாடி
    தாரகன்    :  சகோதரன்,  பூமி,  வீடு, வாகனம்
      திசை காலம் :7 ஆண்டுகள்
    அதிகாரம் : படைத்தலைமை
    பாசைகள் :  மந்திர சாஸ்திரம்
    !!! வாழ்க வளமுடன்!!!