திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
பௌர்ணமி, அமாவாசை:
பிறந்த திதி பலன்கள்: பௌர்ணமியில் பிறந்தவர்கள், நல்ல சிந்தனை உடையவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேம்படுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள். பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் அம்மனை வழிபட வேண்டும்.
பொளா்ணமி திதி: ஹோம,சிற்ப மங்கள காரியங்களில் ஈடுபடலாம் விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.
அமாவசை திதி: பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை வழிபாடுகளை செய்யலாம். தான தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம் இயந்திரப்பணிகள் மேற் கொள்ளலாம்,சிவன்,சக்தி அதிதேவதை ஆவாா்கள்.