திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
தசமி திதி:
புத்திசாலியாகவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் தன்மை உடையவர்களாகவும், ஒழுக்கம் உடையாராகவும் இருப்பார்கள்.
எமதர்மன் இந்த திதிக்கான கடவுள் ஆவார். சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த திதியில் தேவியை வழிபட்டால் நல்லது நடக்கும்.
தசமி திதி:
தசமி திதியில் எல்லா சுபகாரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம்.ஆன்மீகப் பணிகளுக்கு உகந்த நாளிது.பயணம் மேற்கொள்ளலாம்,கிரகப்பிரவேசம் செய்யலாம், வாகனம் வாங்கலாம், அரசு காாியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு எமதருமனே அதிதேவதை.