TITHIPALANGAL

  •    > Details
  • நவமி திதி

    திதிகள்
    திதி என்பது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.  அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.  அதன் பின் சந்திரன்  சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது   பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின்  தமிழ் நாட்காட்டியின் படி  ஒவ்வொரு மாதமும் 30    திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன.  அவை  கிருஷ்ண பட்சம்  அல்லது தேய்பிறை  மற்றும்  சுக்குலபட்சம்  அல்லது வளர்பிறை ஆகும்.

    நவமி திதி:

    புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவராகவும், கலைகளை ஆர்வமுடன் செய்பவராகவும் இருப்பார்கள்.
    இந்த திதிக்கான தேவதை துர்கை அம்மன். நவமி திதியில் சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீ ராம பிரானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.

    நவமி திதியில் செய்யக்கூடிய செயல்கள்.

    நவமி திதி சுப காரியங்களுக்கு உகந்ததாக கருதப்படுவதில்லை. கடினமான காரியங்களைச் செய்ய இந்த திதி மிகவும் உகந்தது. இந்த காலகட்டத்தில் போர் எந்த வடிவத்திலும் மேற்கொள்ளப்படலாம், வெற்றியின் நிகழ்தகவு அதிகரிக்கிறது. அதுபோல தைரியம் தேவைப்படும் எந்த வேலைகளையும் இந்த திதியில் செய்யலாம். வேட்டையாடுதல், விவாதங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிப்பது போன்றவை செய்யலாம்.