TITHIPALANGAL

  •    > Details
  • சஷ்டி திதி

    திதிகள்
    திதி என்பது  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.  அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.  அதன் பின் சந்திரன்  சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது   பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின்  தமிழ் நாட்காட்டியின் படி  ஒவ்வொரு மாதமும் 30    திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன.  அவை  கிருஷ்ண பட்சம்  அல்லது தேய்பிறை  மற்றும்  சுக்குலபட்சம்  அல்லது வளர்பிறை ஆகும்.

    சஷ்டி தியில் பிறந்தவா்கள்
    பலன்கள்:
      சஷ்டியில்பிறந்தவா்கள்  சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவா்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவா்களாகவும்,பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வா்களாகவும்,முன்கோபியாகவும் இருப்பாா்கள்.

    சஷ்டி திதி: சிற்ப வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம்,வாகணம் வாங்கலாம், புதியவா்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவாா்.
    முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவா்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

      திதிகளில்  வளர்பிறை  துவிதியை,  பஞ்சமி, சப்தமி,   தசமி, ஏகாதசி,  துவாதசி,  திரையோதசி,  ஆகியவை விசேஷமானவை.
    தேய்பிறையில்  துவிதியை,  திருதியை,  பஞ்சமி,  மூன்றும்  சிறப்பான  சுப திரிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.