NAKSHATRA PALANGAL

  •    > Details
  • கார்த்திகை நட்சத்திரம்

                                  கார்த்திகை        நட்சத்திரம் பொதுப் பலன்கள்
             
    புத்திசாலித்தனமான தோற்றம் உள்ளவர். சமாதானமானவை  நல்ல அறிவுரை கூறுவார்.  பயன்பாடு இல்லாத வேலைகளை செய்ய மாட்டார். பயன்பாடு கருதி வேலை செய்வதாலும், உறுதியற்ற மனம் இருப்பதால் சில சமயம் முரணாக அமையும். திடீர் கோபம்,  திடீர் பிரியம் ஏற்படும். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவர்.  பிறந்த ஊரிலிருந்து வெகு தூரம் செல்பவர். தாயின் மீது பிரியம் அதிகம், ஆனால் தகப்பனாரனால்
    பிரச்சனை உண்டு. எப்போதும் போட்டி, சந்தை குணம்.He expeet that every one should look at him with respect.
    நல்ல குணங்கள்:
    மேசக் கார்த்திகை அதிகாரப்பசி உள்ளது.( பணம் பொருள் தேவை)
    பொதுவாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். இவர்கள் தங்களது சக்தியை பயன்படுத்தி மற்றவர்களை வளர்த்து விடுவார்கள். இவ்வாறு வளர்த்து விட்ட பின்  இறுதி பலனாக மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.  பணம் பொருள் சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்.  மற்றவர்கள் வழிய  தாமாக முன்வந்து இவர்களுக்கு உதவுவார்கள்.  திட்டமிட்டு செயலாற்றும் தன்மை இவர்களிடம் அதிகம். தேவதை அக்னி என்பதால்  அதிக மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். எப்பொழுதும் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்தும். இவர்கள் கடவுளுக்கும் ,பெரியோர்களுக்கும் மட்டுமே அடிபணிவார்கள். தேவையான பொருட்களை முன்னேற்பாடுடன் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.  எதையும் சரி செய்தல், சுத்தமாக வைத்துக் கொள்ளல், போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.  குழந்தைகள் மீது அதிக பாசம் உள்ளவர். வாழ்க்கையில் சரியான முன்னேற்றமே இருக்கும். புதிய ஆடைகளை அணிய விரும்புவார்.  நல்ல உணவு தயார் செய்து தானும் உண்டு பிறருக்கும் தருவார் . கலை கைத்தொழில் கைவினைப் பொருட்கள் செய்யும் திறமை உண்டு.  அழகு, புத்திசாலித்தனம், ஆடை அலங்கார பொருட்கள் மீது ஆர்வம் உள்ளவர்.
    தொழில் ஈடுபாடு:
    ஆன்மீக குரு, அறம் உரைப்பவர்,  இசை அமைப்பாளர், பாடகர், நாட்டியக் கலைஞர், பில்டிங் காண்ட்ராக்டர், ராணுவப் பணி, மாடலிங், ஆடை அலங்கார நிபுணர்.
    நோய்கள்: கழுத்து வலி, தொண்டை வலி, தலைவலி, காய்ச்சல், மலேரியா.
    இயல்பு கணம்: ராட்சச கணம் ( பணம், தொழில், பதவி, அதிகாரம், சிற்றின்பம்)
    மிருக அடையாளம்: பெண் ஆடு  அதி தேவதை: அக்னி( நெருப்புக் கடவுள்)
    சூரியன் பயோடேட்டா:
    நிறம் : சிவப்பு
    மனைவி : உஷா தேவி, சாயாதேவி
    ரத்தினம் : மாணிக்கம்
    மலர்         : செந்தாமரை
    சமித்து     : இருக்கு
    திசை        : கிழக்கு
    உலோகம் : தாமிரம்
    வாகனம்   : ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்( தேர்) மயில்
    தானியம்  : கோதுமை
    திசை வருடங்கள்:  ஆறு வருடம்
    சேத்திரம் : திருவாடுதுறை
    காரகம்     : தந்தை