சதுஷ்பாத கரணம்
சதுஸ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் முன்பு பேசிய வார்த்தையை பின்பு மாற்றி பேசுவார்கள், தரித்திரம் கொஞ்சம் இருக்கும், சிலர் விலை மகளிர் மீது அளவுகடந்த ஆசை, இழிவானவன், ஆத்திரமிக்கவர், தீயவர், தத்துவம் மற்றும் சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்டவர் என்று நூலில் கூறப்பட்டது. சிலருக்கு ஆரோக்கிய குறைவு, வறுமை காரணத்தால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினம். இந்தக் கரணத்தின் போது தானம், மந்திரம் ஓதல் நன்று. இந்தக் தருணத்தில் சுபகாரியம் தவிர்ப்பது நல்லது. சதுஷ் பாத கரணத்தின் வீட்டு விலங்கு நாய்.
இந்தக் தருணத்தின் கிரகம் குரு ஆவார். இவர்கள் குறைவான வருமானத்திற்கு கடுமையான உழைப்பார்கள். வங்கி மேலாளர், பொருளாதார வல்லுநர், வழக்கறிஞர், நீதிபதி, தர்மகர்த்தா, பேராசிரியர், ஜோதிடத் தொழில், பொற்கொல்லர், வைதீகம், ஆன்மீக தொடர்பான புத்தகம், பூஜை பொருள் விற்பனை செய்வது நன்று. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால் ,நிச்சயம் வெற்றி பெறலாம்.
வழிப்பட வேண்டிய தெய்வங்கள் -
பரிகாரங்கள்:
ஆலங்குடி, பைரவர் வழிபாடு, மிருகத்திற்கு உணவு அளிப்பது, குரு மற்றும் சித்தர்களை நமஸ்கரிப்பது மிகுந்த நற்பலனை தரும்.