தைதுலை கரணம்
கைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் வேந்தர்களிடமிருந்து வேலை பார்ப்பவர்கள். பணக்காரனாக, அழகிய மனம், பெருஞ்சுகவாசி, முரடனாக, மன உறுதி மிக்கவர். கஞ்சன், கடின உழைப்பை மட்டும் நம்புவன், வசீகரமானவர், தர்ம நெறியில் இருந்து பிறழ்ந்து நடப்பான்.
பெண்களாக இருந்தால் ஆண்களை மயக்கும் வல்லமை மிக்கவர். அதுவே ஆண்களாக இருந்தால், விஷம் போன்ற தீய எண்ணங்கள் நிறைந்த பெண்ணிடம் மோகம் கொண்டிருப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கரணத்தில் புதிய பொருள்களை வாங்குவது ,விற்பது, கிணறு வெட்டுவது, பெண்கள் செய்யும் புதிய முயற்சிக்கு ஏற்ற நல்ல நாள். இவர்களின் மிருகம் கழுதை ஆகும்.
இவர்களின் கரணாதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் பலம் பெற்ற தை துளை கரணம் பிறந்தவா்களை தங்களுடன் வைத்திருந்தால் உயா்வு பெறுவாா்கள். முக்கியமாக இவா்களால் வாழ்க்கையில் மற்றும் புதிய முயற்சியில் வெற்றியும் பொருளும் ஈட்டுவார். இவர்களின் பொதுவான தொழில் கலைத்துறை, ஃபேஷன் டிசைனிங், திரைத்துறை, அழகு நிலையம், கட்டடத் தொழில், பயிற வியாபாரம், டிராவல் ஏஜென்சி, நகை, ஜவுளிக்கடை, உணவகம், என்று பல்வேறு தொழில்களில் ஈடுபாடு இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வங்கள்( பரிகாரங்கள்)
ஸ்ரீ ரங்கநாதன், மகாலட்சுமி, ஜேஷ்ட தேவி வழிபாடு,நலிவுற்ற கலைத்துறையினருக்கு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் கொடுத்து உதவுதல் நன்று.