கெளலவ கரணம்
கௌ லவ கரணத்தில் பிறந்தவன் மன்னவர்களின் மனதிற்கு பிடித்த மாணவன், வாழ்வியல் ஒழுக்கங்களை தவறாது கடைபிடிப்பவன், மேன்மை மிக்க பெற்றோர் மீது மட்டற்ற அன்பு, மதிப்பு மரியாதை மிக்கவன். நில புலன்களை அதிகம் சேர்த்துக் கொள்வான். அறிவாளியாக, பல்வேறு செயல்திறன் கொண்டவராக, யானைகளையும் ,குதிரைகளையும், தனக்கு வேண்டிய பல்வேறு சொகுசு வாகனங்களையும் சொந்தமாக வைத்திருப்பான். இந்தக் தருணத்தில் சில செய்ய முடியாத விஷயங்கள் துவங்க, சேமிப்பு தொடங்க, சிறந்த சுப கரணம். இக்கருணத்தின் மிருகம் பன்றி ஆகும்.
கௌலவ கரணத்தில் அதிபதி சனி நல்ல நிலையில் இருந்தால் எந்த தொழில் செய்தாலும் பிரகாசமாக திகழ்வார். முக்கியமாக மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், அரசியல், நம்பகமிக்க துணை அதிகாரியாக, சொல்லிக் கொடுக்கும் ஆசானாக, ஒழுக்கம், சட்டம், நீதி சார்ந்தத்துறை, தார், கருங்கற்கள் வியாபாரம், கட்டுமான பணி, பெட்ரோல், நிலக்கரி சார்ந்த துறை, நான்காம் அதிபதி தொடர்பு கொண்டால் பழைய வீடு, வாகனம் கொண்டு பொருள் ஈட்டுவார்.
வழிபட வேண்டிய தெய்வங்கள்- பரிகாரங்கள்:
பூவராக பெருமாள், வராகர், தஞ்சை மகா வராகி அம்மன், ஸ்ரீ வாஞ்சியம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான், சூரியன் ஒளி பெற்ற கோவில்களுக்கு சென்று வணங்குவது நன்று. முடிந்த அளவுக்கு ஏழைத் தொழிலாளிக்கு உணவு ,உடை ,செருப்பு ,வாங்கி கொடுப்பது நன்று.