KARANAPALANGAL

  •    > Details
  • பாலவகரணம்

    பாலவ கரணம்
    இந்தக் கரணத்தில் பிறந்தவர்  நித்தமும்  தான தர்மம் செய்யும்  கொடையாளி, மிகுதியான இன்பம் நுகர்வுகளை அனுபவிப்பான்.  வெறும் பணக்காரன். அழகன், வெகு சாதாரணமான அல்லது சிறு தொழிலையோ செய்வான்.  பெண்ணாசை மிக்கவர்.  மேலான பண்புகளைக் கொண்டவர்.  உறவினர் மீது அதிக அன்பு ஆசை கொண்டவர் என்று ஜோதிட நூலில் கூறப்படுகிறது.  இந்தக் கரணத்தில்  கோவில் திருவிழா மற்றும் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம்.  இவர்களின் மிருகம் புலி  இந்தக் தருணத்தில் பிறந்தவர்கள் வேண்டிய நேரத்தில் யோசித்து பதுங்கிப் பாயும் புலி ஆக வேலை செய்வார்கள்.

    இவர்களின் கர்ண நாதன் ராகு பகவான்,  ஜாதக கட்டத்தில் ராகு உடன் சேர்ந்த கிரகம் பாவம் பலம் கொண்டு இருந்தால்  பல்வேறு தொழில்கள் செய்து உயர்வார். பொதுவாக இவர்கள் விமானம் கப்பல் துறையில் வேலை கணினி மின்னணுவியல்  அறுவை சிகிச்சை நிபுணர்,  தகவல் தொடர்புத்துறை, நீதித்துறை, மல்யுத்த வீரர், சி ஐ டி, உளவுத்துறை, புதிய கண்டுபிடிப்பு,  பல்வேறு புதிய தொழில்கள் செய்ய ஆர்வமிக்கவர்.  நிகழ்வு மேலாண்மை(Event)  தொடர்பு உடைய  வேலை இவர்களுக்கு பிடிக்கும்.

    வழிபட வேண்டிய தெய்வங்கள்-  பரிகாரங்கள்:
    புலித்தோல் உடுத்திய சிவன்,  ஐயப்பன்,  திருப்பட்டூர் பிரம்மா,  கிராம தேவதை,  குளத்தை காக்கும் காவல் தெய்வத்தை வணங்குவது நன்று.  இறைவனுக்கு சந்தன காப்பு  செய்வது நன்று.  இவர்கள் தினமும்  மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது நன்று.