பவ கரணத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம்
பவாக்கரணத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டார்கள்.தைரியம் மிக்கவர்கள் கம்பீரமான தோற்றமுடையவர்கள்.எந்த வேலையையும் சரியாகவும் சுத்தமாகவும் செய்து முடிப்பார்கள்.ஒரு செயலை பவகர்ணத்தில் செய்தால் வெற்றி நிச்சயம்.தனக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள்.நன்னடத்தை உடையவர்கள்.அஞ்சான் நெஞ்சம் படைத்தவர்கள்.
மென்மையான தலை முடி உடையவர்கள்.பவ ஆண்கள் ஆளுமைதன்மை நிறைந்தவர்கள்.ஆனால் சோம்பேறி. முதலில் சாப்பிடுவார்கள்.
பவகரண பெண்கள்வீட்டின் நிர்வாகதிறனைபொறுப்பேற்றுக்கொள்வார்கள். பவத்தில் பிறந்த ஒரு ஆண் அவர்களின் ராசிக்கட்டத்தில் ஆண் ராசியில் அதிக கிரகம் இருந்தால் அவர்களுக்கு ஆளுமை இருக்கும்.
பவகரணத்தில் பிறந்து பெண் ராசியில் அதிக கிரகம் இருக்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.சுறுசுறுப்பானவர்கள்.பொருளாதாரத்தில் மேலே வரும் எண்ணமுடையவர்கள். வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் வரும் பவ கரணத்தை பயன்படுத்தி உயர்வு அடையலாம். ஒளி பொருந்தியவர்கள்.
அவர்களும் அவர்களின் செயல்களும் கவரும் விதமாக இருக்கும்.சக்தி வாய்ந்ததாக இருக்கும்.எனவே பவகரணத்துடன் மென்மையான குணம் கொண்ட ஜாதகத்தை இணைக்க கூடாது. உதாரணமாக பவம் கரசையை இணைக்க கூடாது.
சந்ததிக்காக அனைத்தையும் சேர்த்து வைப்பார்.வேலை வாய்ப்பு எங்கு அதிகம் இருக்குமோ அங்கேயே இவருக்கு வீடு அமையும் இவர்களுக்கு சொந்த வீடு அமையும் போது உடனடியாக திருமணம் முடிந்து விடும்.பவ கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு எல்லைப் பிரச்சனை இருக்கும்.பவ கரணத்தில் பிறந்தவரின் தாயாரின் வாழ்க்கை பிரச்சினைக்கு உரியதாக இருக்கும்.