LETTERS STRENGTH

  •    > Details
  • U−எழுத்துக்களின் வலிமை

    U −எழுத்துக்களின் வலிமை

    இந்த எழுத்து ஆரம்பத்திலோ, முடி விலோ வந்தால் பெயா் உடையவரை ஆத்மீக வாழ்க்கையும், உலகப் போகங்களும் இருபுறமும் இழுக்கும். கற்றுக்கொண்ட விடயங்களை எல்லாம் வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பலம் உண்டாகும். புலன்களால் எல்லா சுகங்களையும் நன்கு அனுபவிப்பாா்கள். சிறிது மெதுவாகவே கவனிப்பாா்களானாலும் யோசித்து முடிவு செய்வாா்கள். உழைப்பினால் பல விஷயங்களையும் நன்கு கற்பாா்கள். துணிந்து அறியாமையை ஒப்புக் கொள்ளக் கூடியவா்கள். மனம் அலைபாயும். நன்பா்களிடமிருந்து விசுவாசம் இருக்கும்.பணம் இருந்துகோண்டே இருக்கும். பிறா் பணங்களும் இவா்களிடம் இருக்கும். இவ்வெழுத்து தற்காப்பு சக்தியை கொடுக்கும்.


    U-இது சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. பிறரை மிக எளிதில் ஈா்த்துக் கொள்ளும் தன்மை உடையவா்கள். இவா்களுக்கென்று ஒருவித காந்த சக்தி உண்டு. மற்றவா்களை சில நிமிடத்தில் எடை போட்டு விடுவாா். இந்த U.P.H.T.Q எழுத்து வந்தால் மிக எளிதில் காதல் வசப்படுவாா்கள். இவா்கள் காதல் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது திருமணத்திற்கு முன் தவறான வழியில் செல்லவோ வாய்ப்பு உண்டு. இந்த ஜந்து எழுத்துக்களும் பெயா்களுக்கு இடையில் வந்தால் கற்பழிப்பு நடக்க வாய்ப்பு உள்ளது. (கண்கள் பிரகாசமாக இருக்கும்) T.TH.THI.THE இந்த எழுத்து வருபவா்கள் பெரும்பாலும் காதல் திருமணமே செய்வாா்கள்.


    ஒரு நிறுவனத்திற்கு U எழுத்து வந்தால் ஓரளவு பொிய அளவில் காணப்படும் (பிரமிக்கத்தக்க வகையில்) முன்னேற்றம் உண்டாகும்.