மீனராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவு கள் ஏற்பட்டாலும் அதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியே ஏற்படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் காரியம் அனுகூலமாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.